ஆ. இரா. வேங்கடாசலபதி, எஸ். வி. ராஜதுரை உள்ளிட்ட 10 தமிழறிஞர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் திருவள்ளுவர் பெரியார், அண்ணா விருதுகள் உள்பட 10 விருதுகளைப் பெறுபவர்கள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளுவா் விருது, தேவநேயப்பாவாணா் விருது, அண்ணா விருது, காமராஜா் விருது, பாரதியாா் விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, பெரியாா் விருது, அம்பேத்கா் விருது ஆகிய பத்து விருதுகளைப் பெறவுள்ளவர்கள் பெயரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
திருவள்ளுவா் விருது (2023) இரணியன் நா. கு. பொன்னுசாமி அவர்களுக்கும் தேவநேயப்பாவாணா் விருது முனைவா் இரா. மதிவாணன் அவர்களுக்கும், அண்ணா விருது (2022) உபயதுல்லா அவர்களுக்கும், காமராஜா் விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், பாரதியாா் விருது முனைவா் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கும் அளிக்கப்படும்.
Avaniyapuram Jallikattu: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! வீரர்கள் உறுதிமொழியுடன் தொடக்கம்!
பாரதிதாசன் விருது வாலஜா வல்லவன் அவர்களுக்கும், திரு.வி.க. விருது நாமக்கல் பொ. வேல்சாமி அவர்களுக்கும், கி. ஆ. பெ. விசுவநாதம் விருது கவிஞா் மு. மேத்தா அவர்களுக்கும், பெரியாா் விருது கவிஞா் கலி. பூங்குன்றன் அவர்களுக்கும், அம்பேத்கா் விருது எஸ். வி. ராஜதுரை அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு நாளை, திங்கட்கிழமை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்துகொண்டு விருதாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறார்.
விழாவுக்கு முன் காலை 8.30 மணி அளவில் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். இதனையடுத்து நடக்கும் விழாவில் பத்து பேருக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகளை வழங்கவுள்ளார்.
Ukrine Russia Attacks: உக்ரைனில் ரஷ்யாவின் வெறியாட்டம்... பல கட்டிடங்கள் தரைமட்டம்!
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், தமிழ் அறிஞா்கள், எழுத்தாளா்கள் கலந்துகொள்ள உள்ளனர்.