
நாகை மாவட்ட ஆட்சியிர் அருண் தம்புராஜ் ஆதரவற்ற முதியவர்களுக்கு புத்தாடை வழங்கி பொங்கல் கொண்டாடினார்.
நாகையில் உள்ள அனுபவம் முதியோர் இல்லத்தில் உறவுகளால் கைவிடப்பட்ட 36 ஆதரவற்ற முதியவர்கள் வசிக்கின்றனர். அந்த இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டார்.
மூதாட்டிகள் ஆட்சியரை வரவேற்று சூடம் ஏற்றி பொட்டு வைத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். ஆட்சியருடன் வந்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தமிமுன்ஷாவுக்கும் முதியவர்கள் அன்புடன் ஆசி கூறினர்.
பனை மட்டை, கீற்று, பனை ஓலை உள்ளிட்டவைகளை வைத்து தாங்களே செய்த சிறிய படகு மாவட்ட ஆட்சியருக்கு பரிசாக அளித்தனர். மாவட்ட ஆட்சியரும் அங்கிருந்த அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கி, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.