விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் 10,000 ரூபாய்.. அரசனை வெளியிட்ட தமிழக அரசு - முழு விவரம்!

By Ansgar R  |  First Published Jul 16, 2023, 6:58 PM IST

சாலை விபத்தில் காயமடைபவர்களை காப்பாற்றும் பலரை ஊக்குவிக்கும் வகையில் இந்த வெகுமதி வழங்கப்பட உள்ளது.


ஒரு சாலை விபத்து நடக்கும்பொழுது அந்த இடத்திற்கு தகவல் அறிந்து காவல்துறை அதிகாரிகளும் மருத்துவப் பணியாளர்களும் வருவதற்கு முன்பாக ஏதோ ஒரு தனி மனிதன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவர்களுடைய உயிர்களை காப்பாற்றிய பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் குறித்து நாம் கேட்டிருப்போம். 

இந்நிலையில் அப்படி விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுபவர்களுக்கு ரூபாய் 10,000 வெகுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. சாலை விபத்தில் காயமடைபவர்களை காப்பாற்றும் பலரை ஊக்குவிக்கும் வகையில் இந்த வெகுமதி வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

சமூக நலம் காக்க "1 கோடி கையெழுத்து இயக்கம்".. சூப்பர் ஸ்டார் வரிசையில் சைன் போட்டு ஆதரித்த சூர்யா!

ஏற்கனவே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு மத்திய அரசு ஐயாயிரம் ரூபாய் வழங்கவுள்ள நிலையில், அதில் மாநில அரசின் பங்கையும் சேர்த்து இனி பத்தாயிரம் ரூபாயாக வழங்கப்படும் என்று அரசாணை வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சாலை விபத்துகளில் மரணிக்கிறார்கள். இவர்களில் பலர் விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குள் சிகிச்சை கிடைக்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை கருத்தில் கொண்டு தான் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் உரிய நேரத்தில் அனுமதிப்பவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த காப்பாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசோடு விருது வழங்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

டீ கடைக்குள் புகுந்த வேன்.. மகன் மற்றும் தாய் உள்பட மூவர் உடல் நசுங்கி பலி - ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை!

click me!