ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு அதிரடி முடிவு!

By vinoth kumarFirst Published Aug 13, 2018, 5:30 PM IST
Highlights

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகள் செய்யும் அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகள் செய்யும் அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததையடுத்து ஆலை மூடப்பட்டது.

 

இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதால், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்தது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலையை இயக்க அனுமதியில்லை என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வா் பழனிசாமி, அதிகாரிகள் மற்றும் அமைச்சா்களுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் திடீா் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாய ஆணையக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நாளை தமிழக அரசு கோரிக்கையை முன்வைக்க உள்ளது. 

click me!