காவிரி ஆற்றங்கரையில் சித்தராமையாவுக்கு இறுதிச்சடங்கு; திருச்சியில் ஆற்றில் இறங்கிய விவசாயிகளால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Sep 29, 2023, 4:49 PM IST

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு இறுதிச் சடங்கு செய்து, காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்கும் வரை ஆற்றை விட்டு வெளியே வரமாட்டோம் எனக்கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


திருச்சி சிந்தாமணி பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாய விலை பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் படி உரிய விலையை வழங்க முன்வர வேண்டும், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும், மேகதாது அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 57நாட்களாக தொடர்ந்து பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும், போராட்டங்களின்போது சுமார் நான்கு முறை காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதை கண்டித்து போராட்டம் நடத்தியதுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்திற்கு முன்பாக மாலை போட்டு ஒப்பாரி வைத்து, கருமாதி செய்தனர். இதனை கண்டித்து திருச்சியிலும் அய்யாக்கண்ணு தலைமையில் கர்நாடகா முதல்வர் சித்தாராமையாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கருமாதி செய்ததுடன் அதற்கு இரண்டாம் நாள் பால் தெளித்தனர்.

நான் கடவுள் சினிமா பாணியில் கிரிவலப் பாதையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட சிறுவர்கள்; அதிகாரிகள் அதிரடி

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க கூடாது என்று கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று நடைபெறும் பந்தை கண்டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதம், மாதம் காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்காததை கண்டித்தும், கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா உருவ படத்தை கருமாதி செய்ததை இன்று காவிரி ஆற்றில் கரைக்கும் இறுதி சடங்கும், காவிரியில் தண்ணீர் திறக்கும் வரை காவிரி ஆற்றுக்குள்ளேயே கூடாரம் அமைத்து காத்திருப்பதாகக் கூறி ஓயமாறி இடுகாடு வடபுறத்தில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியாக இருந்த மூதாட்டிக்கு ஆப்பிளை நருக்கி கொடுத்து 40 சவரன் நகை கொள்ளை; மைத்திலிக்கு போலீஸ் வலை?

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் சரக காவல்துறை உதவி ஆணையர் நிவேதாலட்சுமி மற்றும் காவல்துறையினர் விவசாயிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்து காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை மீட்பதற்காக தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆற்றில் இருந்து வெளியே வந்த அவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக காவிரி பைபாஸ் சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!