இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 14ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 14ஆம் தேதி தொடங்குவதாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான முதல் கட்டக் கலந்தாய்வு ஆரம்பமாகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 5 முதல் 13 வரை நடைபெறும் என்றும் மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறும் எனவும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு கூறியுள்ளது.
undefined
ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும். அக்டோபர் 1ஆம் தேதி முதல் படிப்பில் சேர்ந்தவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வு குழுவின் இணையதளத்தில் கலந்தாய்வு விவரம், அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கான கலந்நாய்வு தேதியை பார்த்து அந்த தேதியில் வந்து தவறாமல் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
கொலைப் பட்டினி கிடந்த 28 நாய்கள்... வளர்த்தவரின் காலையே உண்டு உயிர் பிழைத்த பயங்கரம்!