சத்யதேவ் சட்ட கலைக்கூடம்.. திறந்து வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் - துணைநிற்கும் நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்து!

By Ansgar R  |  First Published Jul 16, 2023, 7:43 PM IST

தமிழகத்தில் ஓய்வு பெற்ற நீதிஅரசர் திரு. சந்துரு அவர்களை தற்பொழுது இயக்குனராகக் கொண்டு ஒரு புதிய கலைக்கூடம் துவங்கப்பட உள்ளது. இதற்கு சத்யதேவ் சட்டக் கலைக்கூடம் என்ற பெயரும் இடப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த சட்ட கலைக்கூடத்தை திறந்து வைத்து சிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். மேலும் இந்த சத்யதேவ் சட்டக் கலைக்கூடத்தோடு பிரபல நடிகர் சூர்யா அவர்களும் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் அவர்களும் இணைந்து பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில தகவல்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பகிர்ந்துள்ளார் அவை பின்வருமாறு..

சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி  அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், ரிசர்வேஷன் கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ் சட்ட கலைக்கூடத்தை தொடங்கி வைத்தேன்.

Tap to resize

Latest Videos

சென்னை மணலி விரைவு சாலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது!

எனவே, "நான் முதல்வன்" திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி திரு.சூர்யா, இயக்குநர் திரு. ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

இந்த சத்தியதேவ் சட்டக் கலைக்கூட திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால்! இந்த 2 வரங்கள் கேட்பேன்! ராமதாஸ்.!

click me!