சென்னை மணலி விரைவு சாலையில் ஹோண்டா டியோ இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பற்றி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மணலி விரைவு சாலையில் ஹோண்டா டியோ இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பற்றி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர் அடுத்த மணலி விரைவு சாலை எம் எஃப் எல் சந்திப்பில் ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென்று வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட வாகன ஓட்டுநர் உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி பார்ப்பதற்குள் இருசக்கர வாகனம் எரிய தொடங்கியது.
தமிழ்நாடு தினம் நவ 1க்குப் பதிலாக ஜூலை 18க்கு மாற்றப்பட்டது ஏன்? பின்னணி என்ன?
இதனால் அதிர்ச்சி அடைந்து வாகன ஓட்டி வாகனத்தை விட்டுவிட்டு தூர ஓடத் தொடங்கினார். சற்று நேரத்தில் இருசக்கர வாகனம் மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. வண்டியின் உரிமையாளர் அருகில் இருந்த போக்குவரத்து காவலரிடம் முறையிட்டதை அடுத்து, போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் அதற்குள் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்தது நாசமாகிவிட்டது. கனரக வாகனங்கள் செல்லும் பரபரப்பான மணலி விரைவு சாலையில் இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பற்றி எரிந்தத சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்துகொள்ளும்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு