
இடி, மின்னலுடன் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் 5 மணிநேரம் பவர் கட்! எங்கெல்லாம் தெரியுமா?
இதன் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு வந்த லண்டன், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 8 விமானங்கள் சிக்னல் கிடைக்காததால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்ததை அடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு தரையிறக்கப்பட்டன.
இதையும் படிங்க;- Chennai Rain: இடி, மின்னலுடன் சென்னை மக்களை அலறவிட்ட கனமழை.. புறநகரையும் விட்டு வைக்கவில்லை..!
அதேபோல உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நேற்று நள்ளிரவு புறப்பட தயாராக இருந்த 12 விமானங்கள் 30 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.