இரவில் உருவாகும் புயல்.. சென்னைவாசிகளே உஷார்.! சென்னையில் கொட்டும் மழைக்கு காரணம் !

By Raghupati R  |  First Published Jul 10, 2023, 12:00 AM IST

சில நாட்களுக்கு பிறகு தலைநகர் சென்னையில் மழை பெய்து வருகிறது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.


கடந்த இரு நாட்களாகப் பல வட மாநிலங்களில் பெய்யும் கனமழை காரணமாகக் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இப்போது தலைநகர் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

மேற்கு திசை வேறுபாடு காரணமாக, சென்னையில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, வள்ளுவர் கோட்டம், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. அசோக் நகர், கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

Tap to resize

Latest Videos

ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், வள்ளுவர் கோட்டம், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் செம மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படி சென்னையில் நகரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நகர் பகுதிகள் மட்டுமின்றி, பூந்தமல்லி, மாங்காடு,கரையான்சாவடி. நசரத்பேட்டை, குமணன்சாவடி உள்ளிட்ட உள்ளிட்ட புறநர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

Heaviest happening to the south of and southern suburbs. Fir the city to get rains have to form WNW of Chennai. Fair chance for fresh storms to form later in the night. . pic.twitter.com/N7iH5NcZim

— Chennai Rains (COMK) (@ChennaiRains)

undefined

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தனியார் வானிலை பதிவில், “சென்னையின் தெற்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் அதிக மழை பெய்யும். நகரத்தில் மழை பெய்ய வேண்டுமானால்  இடியுடன் கூடிய மழை பெய்யலாம். இரவில் புதிய புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

Very heavy rains with strong winds in Embassy Residency Perumbakkam. Scary scenes. pic.twitter.com/HmG1kO9Rzn

— sashidharan (@SashidharanNC)

ட்விட்டரில் சென்னைவாசி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பெரும்பாக்கத்தில் உள்ள எம்பசி ரெசிடென்சியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது” என்று வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இதுவரை சென்னை மற்றும் சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !

வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

click me!