மத்திய அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு...நிறைவேறிய மு. க. ஸ்டாலின் கோரிக்கை

By Kalai Selvi  |  First Published May 7, 2023, 3:05 AM IST

வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழியில் மத்திய அரசு தேர்வு  நடத்த சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதன் பின்னணியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இருந்ததை இந்த நாடே அறியும்.


ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும். இவை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படி இருமொழிகளில் நடத்தப்படுவதால் பல மாநிலங்களில் உள்ள விண்ணப்பதாரர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். தமிழ்நாட்டில் மத்திய அரசு தேர்வுகளை எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் சிரமம் ஏற்பட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் தங்கள்  தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாமல் திணறி வந்தனர். #2YrsOfDravidianModel

Latest Videos

undefined

சமீபத்தில் கூட சி.ஆர்.பி.எப் பணிகளுக்கான தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணை வெளியாகி இருந்தது. இதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். தேர்வர்கள் சந்திக்கும் மொழிப் பிரச்சனையை எடுத்துரைத்தார்.

இதனிடையே  அமைச்சரும், திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தன் தரப்பில், போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார். இப்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், மத்திய அரசின் தேர்வு வரலாற்றில் முதல் முறையாக தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எஸ்எஸ்சி, எம்டிஎஸ், சிஎச்எஸ்எல்இ ஆகிய தேர்வை எழுத வழிவகை செய்யப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #2YrsOfDravidianModel

மத்திய அரசின் இந்த அறிவிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலினும் வரவேற்றார். ஏனென்றால், இந்தத் தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இதற்கு முன்னர் நடத்தப்பட்டு வந்தது. பல ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு பணிகளுக்கு முயன்றவர்கள் மொழி சிக்கலால் தயங்கி வந்தனர். இப்போது மத்திய அரசின் அறிவிப்பு அவர்களின் முயற்சிக்கு உரமிட்டுள்ளது. #2YrsOfDravidianModel

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்கள், முக்கிய அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளுக்கு தமிழ் மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  தாய்மொழியான தமிழில் தேர்ச்சி பெறுபவர்களின் வினாத்தாள்கள் மட்டுமே திருத்தப்படும். அவர்களுக்கு தான் அரசு பணி என்ற நடைமுறையும் இப்போது தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #2YrsOfDravidianModel

click me!