IAS Officers : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் மிகப்பெரிய அதிரடி மாற்றமாக 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்ட உத்தரப்பின்படி சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனர் உள்பட தமிழகத்தில் பணியாற்றி வரும் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார் இதற்கான உத்தரவு வெளியாகி உள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் குறித்து பார்க்கலாம்.
அதன்படி.. ரீட்டா ஹரிஷ் தாக்கர் மறுவாழ்வுத்துறை அரசு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். நந்தகுமார் மனிதவள மேம்பாட்டு துறை அரசு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். நாகராஜன் நிதித்துறை அரசு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தாமஸ் வைத்தியன் மாற்று திறனாளிகள் மறுவாழ்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அமித் ஷா கண்டித்தாரா? வைரல் வீடியோ சர்ச்சைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்
திரு. சரவணன் வேல்ராஜ் அவர்கள் புவியியல் சுரங்கத் துறை ஆணையர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். திரு. அன்பழகன் அவர்கள் சர்க்கரை துரை ஆணையராக பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கஜேந்திர நவநீத் வணிகவரித்துறை முதன்மை செயலாளராகவும், சமீரன் வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனராகவும், சிவ கிருஷ்ணமூர்த்தி, சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ஆகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
பூஜா குல்கர்னி உள்கட்டமைப்பு வாரிய செயல் அதிகாரியாகவும், நிதித்துறை சிறப்பு செயலாளராகவும் இனி பணியாற்றும் நிலையில், அலர்மேல் மங்கை கைடன்ஸ் தமிழ்நாடு செயல் இயக்குனராகவும், லலிதாதித்யா நீலம் சேலம் கூடுதல் கலெக்டராகவும் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். அண்மையில் சென்னையில் 40 காவல் ஆய்வாளர்கள் திடீரென அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த சூழலில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் முடிந்து தற்பொழுது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் நடக்கின்ற மிகப்பெரிய மாற்றமாக இந்த பணியிடை மாற்றம் பார்க்கப்படுகிறது.