ராமேஸ்வரத்தில் புதிதாக விமான நிலையம்.!- தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்பு

Published : Mar 14, 2025, 11:11 AM ISTUpdated : Mar 14, 2025, 11:47 AM IST
ராமேஸ்வரத்தில் புதிதாக விமான நிலையம்.!- தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்பு

சுருக்கம்

தமிழக நிதி நிலை அறிக்கையில் புதிய தொழிற்பூங்காக்கள், மருத்துவமனை மேம்பாடு, மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், புதிய விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, மகளிர் உரிமை தொகை, மகளிர் சுய உதவி குழு, புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

  • திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா 250 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும், இதன் மூலம் 5ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
  • மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா ரூ.250 கோடி அமைக்கப்படும் இதன் மூலம் 20,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 
  • காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்வுக்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு
  • சென்னை அறிவியல் மையம் ரூ.100 கோடி ஓதுக்கீடு
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ரூ13,807 கோடி நிதி ஒதுக்கீடு இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை

 

  • முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு
  • 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ. 152 கோடி 1,308 மாணவர்கள் பயன்
  • 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ. 20,000 மானியம்
  • ராமேஸ்வரத்தில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும்

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!