மகளிர் உரிமை தொகை விரிவாக்கம், 25ஆயிரம் புதிய வீடுகள்- பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்ன.?

Published : Mar 14, 2025, 10:14 AM ISTUpdated : Mar 14, 2025, 10:20 AM IST
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம், 25ஆயிரம் புதிய வீடுகள்- பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்ன.?

சுருக்கம்

2025-26ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். தொல்லியல் அகழாய்வுகள், அருங்காட்சியகங்கள், கிராம சாலை மேம்பாடு மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் அடங்கும்.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் திட்டங்களை பார்ப்போம்.

  • உலகத் தமிழ் ஒலிம்பியாட் ரூ.1 கோடி பரிசுத்தொகை
  • தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்
  • சிவகங்கை - கீழடி, சேலம் - தெலுங்கனூர், கோயம்புத்தூர் - வெள்ளலூர், கள்ளக்குறிச்சி - ஆதிச்சனூர், கடலூர் - மணிக்கொல்லை, தென்காசி -கரிவலம்வந்தநல்லூர், தூத்துக்குடி - பட்டணமருதூர்
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ.21 கோடி
  • ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் ரூ.22 கோடி
  • எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்க 40 கோடி ஒதுக்கீடு
  • கலைஞர் கனவு இல்லம் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 

  •  முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் 6100 கி.மீ. நீளம் .2,200 ஒதுக்கீடு
  • சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப்  25,000 புதிய வீடுகள் கட்ட  ரூ.600 கோடி ஒதுக்கீடு
  • திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரூ.400 கோடி ஒதுக்கீடு
  • சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டத்திற்கு 2,423  ரூபாய் ஒதுக்கீடு
  • 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு ரூ.675 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)ரூ.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவு செய்யப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?