தமிழக பட்ஜெட் 2025-26: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன், அரசு பள்ளிகளில் தரம் உயர்வு

Published : Mar 14, 2025, 10:44 AM IST
தமிழக பட்ஜெட் 2025-26: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன், அரசு பள்ளிகளில் தரம் உயர்வு

சுருக்கம்

2025-26ஆம் ஆண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் முன்னேற்றம், கல்வி, ஊரக வளர்ச்சி போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தோழி விடுதிகள், மாணவியர் விடுதிகள், கணினி ஆய்வகங்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

TN budget highlights : தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சி, கல்வி, மகளிர் முன்னேற்றம், ஊரக வளர்ச்சி என பல திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இதோ.. 

  •  தோழி விடுதிகள் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் ரூ. 77 கோடியில் அமைக்கப்படும்
  • சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவியர் விடுதிகள் 275 கோடி ரூபாயில் அமைக்கப்படும். 
  • அன்புச்சோலை முதியோர் பகல் நேர பராமரிப்பு மையம் 25 இடங்கள் அமைக்கப்படும் இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு ரூ.160 கோடி ஒதுக்கீடு
  • 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்த ரூ.56 கோடி ஒதுக்கீடு
  • 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வுக்கு  ரூ.65 கோடி ஒதுக்கீடு

  • வேளச்சேரியில் புதிய பாலம் ரூ.310 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இதன் மூலம் 7 இலட்சம் பேர் பயன்
  • சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம்
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள் ரூ. 37,000 கோடி வழங்கிட இலக்கு நிர்ணயம்,  10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்
  • இலவச பேருந்து திட்டமான மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு  ரூ.3,600 கோடி ஒதுக்கீடு
  •  நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு 2,000 கோடி ஒதுக்கீடு
     

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!