Registration Fees: தமிழகத்தில் இன்று முதல் பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு.. எந்த பதிவுக்கு எவ்வளவு ரூபாய்?

By vinoth kumar  |  First Published Jul 10, 2023, 9:41 AM IST

பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;-  மீண்டும் சீனாக சீனுக்கு வரும் சசிகலா.! அதிரடி அறிவிப்பு வெளியீடு.! அதிர்ச்சியில் இபிஎஸ் .!

சேவை கட்டணத்தை உயர்த்தும் முடிவின் அடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகும் எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் 4000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாகும் என்று தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதேபோல் பொது அதிகார ஆவணக்கட்டணம்  10,000 ரூபாயிலிருந்து சொத்து மதிப்பில் 1 சதவீதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  செங்கல்பட்டில் பயங்கரம்! ஸ்கெட்ச் போட்டு பாமக முக்கிய பிரமுகர் படுகொலை! பதற்றம்! துப்பாக்கிச்சூடு.!

இந்த கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

click me!