கடலூர் அருகே திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
கடலூர் மாவட்டம், உள்ள நல்லாத்தூர் பகுதியில் திமுக நிர்வாகி இல்ல மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்க வந்தார். அப்போது காரை நிறுத்திவிட்டு சென்ற சில நிமிடங்களில் மர்ம நபர் மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீசினார்.
இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பெட்ரோல் குண்டு வீசிய போது, திருமண மண்டபத்தில் இருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு தெறித்து ஓடினர். உடனே இந்த தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !
இந்த சம்பவம் இரவு 8 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக சட்டமன்ற உறுப்பினர் உயிர் தப்பினார். நிகழ்வில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் எவ்வித காயமும், பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் எம்எல்ஏவை நோக்கி நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவினர் சிலர் எம்எல்ஏவை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுகிறார்கள். எம்எல்ஏவுக்கு எதிரிகள் யாரவது இருக்கின்றனரா? பழிவாங்குவதற்கு இப்படி செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்