சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா நடைபெற்றதை முன்னிட்டு கோயிலில் உள்ள கனகசபையின் மீது பக்தர்கள் ஏறி சுவாமியை வழிபட ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தீட்சிதர்கள் தடை விதித்து நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நடந்த தகராறில் தீட்சிதர் ஒருவரின் பூணூல் அறுக்கப்பட்டதாக அறநிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா நடைபெற்றதை முன்னிட்டு கோயிலில் உள்ள கனகசபையின் மீது பக்தர்கள் ஏறி சுவாமியை வழிபட ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தீட்சிதர்கள் தடை விதித்து நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்தனர். இதற்கு பக்தர்களும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறை பாதுகாப்புடன் கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தடை விதித்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றினர். அப்போது அவர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 11 தீட்சிதர்கள் மீது சிதம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தடையை மீறி காவல் துறையினர் உதவியுடன் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கனகசபையில் ஏறியுள்ளனர். இது ஆகம விதிக்கு எதிரானது என தீட்சிதர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இந்நிலையில், கடந்த செவ்வாக்கிழமை கற்பக கணேச தீட்சிதர் கோயில் பூஜை செய்யும் பணியிலிருந்தபோது அறநிலைய அதிகாரிகள், பெண் காவல் துறையினர் ஸ்ரீதேவி, வேல்விழி, சரஸ்வதி, பொன்மகரம் மற்றும் சில பெண் காவலர்கள் திடீரென்று கனகசபை மீதேறி வேகமாக, கனசபைக்குள் அத்துமீறி நுழைய முயன்றபோது அப்போது பூஜை பணியிலிருந்த என்னை ஆக்ரோஷமாக தள்ளிவிட்டு என்னை நிலைகுலைய வைத்து நான் அணிந்திருந்த ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் தள்ளிவிட்டு, கனசபைக்குள் நுழைந்து என் பூஜை பணிக்கு இடையூறு மற்றும் எதிர்பாரத வகையில் என் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதனை தீட்சிதர்கள் தெரிவித்த புகாரை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.