சளி தொந்தரவுக்கு வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி; செவிலியர்களின் அலட்சியத்தால் கதறும் பெற்றோர்

By Velmurugan s  |  First Published Jun 29, 2023, 10:30 AM IST

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி தொந்தரவுக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி போடப்பட்ட நிலையில் செவிலியர்கள் மீது நடவகடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் கருணாகரன். இவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய மூத்த மகள் சாதனாவுக்கு வயது 13. உடல்நிலை சரியில்லை. அவரை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். 

அங்கு எனது மகளை பரிசோதனை செய்த மருத்துவரிடம் எனது மகளுக்கு சளி பிரச்சினை இருப்பதாக தெரிவித்தேன். இதை அடுத்து எனது மகளை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமிக்கு ஊசி போடவும், மாத்திரையும் எழுதி சீட்டு கொடுத்தார். அந்த சீட்டைப் பெற்றதால் மாத்திரை வாங்கிக் கொண்டு ஊசி போடும் இடத்திற்கு வந்தேன். அங்கிருந்த செவிலியர் என்னிடம் சீட்டை வாங்கி கூட பார்க்காமல் எனது மகளுக்கு இரண்டு ஊசி போட்டார். 

Tap to resize

Latest Videos

வேலை வாங்கி தருவதாக கூறி கிராம பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த ஊர் தலைவர்; கடலூரில் பரபரப்பு

அப்போது நான் எதற்கு ரெண்டு ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் நாய் கடித்தால் 2 ஊசி தான் போட வேண்டும் என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், எனது மகளுக்கு சளி பிரச்சினை தான் என்றேன். அதற்காக மலுப்பலாக பதில் அளித்தார். இதற்கிடையில் எனது மகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடன் அவரை உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் சேர்த்து உள்ளேன். ஆகவே எனது மகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த செவிலியர் பணியில் இருந்த, மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

கோவையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகை

சளி தொந்தரவுக்காக மருத்துவமனைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி போட்ட செவிலியரால் நோயளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

click me!