சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறிய அறநிலையத்துறையினர்! – CCTV காட்சிகளை வெளியிட்ட தீட்சிதர்கள்!!

By Dinesh TG  |  First Published Jun 28, 2023, 5:51 PM IST

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்த சிசிடிவி காட்சிகளை சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் வெளியிட்டுள்ளனர்.
 


சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்த சிசிடிவி காட்சிகளை சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் வெளியிட்டுள்ளனர்.



கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு, கனக சபை மீது பக்தர்கள் ஏற நான்கு நாட்களுக்கு அனுமதியில்லை என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்களை கனக சபையில் ஏற்றும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதனிடையே, போலீசார் மற்றும் அறநிலைத்துறையை சேர்ந்த 6 பேர் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. கோவிலினுள் இருந்து அவர்கள் வெளியே வந்தபோது தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Latest Videos

சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சுயமாக முடிவெடுப்பது நல்லதல்ல… அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை


இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், சிதம்பரம் நடராஜர் கோயிவில் வரலாற்றில் கறுப்பு பக்கம் இது என தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

click me!