கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடும்ப பெண்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக பொதுமக்கள் புகார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சேமகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகிப்பவர் மணிவண்ணன். கடந்த சில தினங்களாக இவர் சில பெண்களுடன் தனிமையில் இருப்பது போன்ற ஆபாச படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. அந்த படங்களில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இடம் பெற்றிருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சேமக்கோட்டை கிராம மக்கள் சார்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகிக்கும் மணிவண்ணன் எங்கள் கிராமத்தில் உள்ள குடும்ப பெண்களை குறிவைத்து அவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அரசாங்கத்தில் இருந்து பல்வேறு சலுகைகளை பெற்றுத் தருவதாகவும் கூறி பெண்களை ஏமாற்றி உள்ளார்.
மேலும் அந்த பெண்களிடம் தனிமையில் இருந்து உல்லாசம் அனுபவித்ததோடு அவர்களுடன் தனிமையில் இருப்பதை தனது செல்போன் கேமராவில் பதிவு செய்து அதனை தற்போது இணையத்தில் பரப்பி வருகிறார். இதனால் எங்கள் கிராம பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளனர். எனவே இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிவண்ணனுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகை
மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், மணிவண்ணனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும் பெண்களின் ரகசியம் காக்கப்படும். மணிவண்ணன் மீது உரிய விசாரணை நடத்தி நிச்சயம் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்தார்.