2024 - 2025ம் நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022-2023ம் நிதியாண்டில் 16.19 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13,442 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

12:17 AM (IST) Feb 21
நீங்கள் உங்கள் நண்பர் அல்லது காதலியுடன் கோவா செல்ல திட்டமிட்டிருந்தால், கோவாவில் பிரபலமான கடற்கரைகளை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
11:57 PM (IST) Feb 20
எலான் மஸ்க், நியூராலிங்க் மூளை சிப் உள்வைப்பின் முதல் மனித சோதனை நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளது, நோயாளி இப்போது சிந்தனையைப் பயன்படுத்தி கணினி சுட்டியைக் கட்டுப்படுத்த முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
10:54 PM (IST) Feb 20
ஜியோ பாரத் பி2 ஃபீச்சர் ஃபோன் மூலம், பயனர்கள் ஜியோசினிமா, ஜியோசாவ்ன், ஜியோபே மற்றும் பிற தளங்களை அனுபவிக்க முடியும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
10:14 PM (IST) Feb 20
பலரும் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் உண்டாகும் நோய்கள் என்னென்ன, அவற்றில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
09:00 PM (IST) Feb 20
உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்வதற்கான ரயில்வே கட்டணங்கள் எவ்வளவு? அதற்கு செலுத்த வேண்டிய அபராத கட்டணம் எவ்வளவு? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
08:34 PM (IST) Feb 20
சுசூகி அக்சஸ் 125 விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
07:36 PM (IST) Feb 20
நீங்கள் கர்நாடகாவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜைக் கொண்டு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
06:52 PM (IST) Feb 20
11 மாத ஒப்பந்தத்திற்கு முன் குத்தகைதாரர்களை வீட்டை காலி செய்யும்படி நில உரிமையாளர்கள் கேட்கலாமா? இதற்கு வழக்கறிஞர் என்ன சொல்கிறார்? என்பதை பார்க்கலாம்.
06:11 PM (IST) Feb 20
2 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், ஸ்டைல், நல்ல செயல்திறன் கொண்ட விலை குறைந்த சிறந்த பைக்குகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
06:11 PM (IST) Feb 20
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
05:34 PM (IST) Feb 20
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
05:05 PM (IST) Feb 20
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் குழு நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது
04:47 PM (IST) Feb 20
சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவை கலைத்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்
03:27 PM (IST) Feb 20
உலகின் மிக விலை உயர்ந்த சட்டையை அணிந்து இந்தியர் ஒருவர் வலம் வருகிறார். அந்த சட்டையின் விலை என்ன?
02:58 PM (IST) Feb 20
உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
02:00 PM (IST) Feb 20
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 370ஆவது பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
01:15 PM (IST) Feb 20
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இறுதியாக 17 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
12:22 PM (IST) Feb 20
பிரதமர் மோடி, தனது ஜம்மு பயணத்தின் போது, ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்
12:13 PM (IST) Feb 20
2024 2025ம் நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 2023ம் நிதியாண்டில் 16.19 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13,442 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
12:09 PM (IST) Feb 20
ரூ.3,67 கோடி நிதியில் ராமநாதபுரம், சிவகங்கையில் மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டம்
12:04 PM (IST) Feb 20
தேர்வின் போது தூக்கம் வராமல் இருக்க மாத்திரைகளை உட்கொண்ட மாணவிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
12:01 PM (IST) Feb 20
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
12:00 PM (IST) Feb 20
விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைக்க ரூ.60 கோடியில் விளைபொருட்களை பண்ணை வழி வர்த்தகம் செய்ய வழிவகை செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11:57 AM (IST) Feb 20
ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
11:51 AM (IST) Feb 20
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:50 AM (IST) Feb 20
2024-25ஆம் ஆண்டில் மேலும் 10 பொருட்களுக்கு புவிசா குறியீடு பெறப்படும். சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பாவுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
11:49 AM (IST) Feb 20
சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, புவனகிரி மிதி பாகற்காய் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11:44 AM (IST) Feb 20
பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11:34 AM (IST) Feb 20
விவசாயிகள் 75 ஆயிரம் மீட்டத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11:33 AM (IST) Feb 20
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:28 AM (IST) Feb 20
7 லட்சம் தரமான சென்னை நாற்றுகளை வழங்க ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு. தென்னந்தோப்பில் ஊடுபயிர் பயிரிட ரூ.5.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை செயல் விளக்க திடல் அமைத்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.12.5 கோடி நிதி ஒதுக்கீடப்பட்டுள்ளது.
11:27 AM (IST) Feb 20
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு விவசாயிகளுக்கு ரூ.208 நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்
11:23 AM (IST) Feb 20
புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
11:21 AM (IST) Feb 20
ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:18 AM (IST) Feb 20
தானியங்கி மின்னனு நீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 12,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11:15 AM (IST) Feb 20
சிறந்த உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று விவசாயிகளுக்கு பாராட்டு பத்திரத்துடன் பணிப்பரிசும் வழங்கப்படும்.
11:11 AM (IST) Feb 20
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:00 AM (IST) Feb 20
2023-24 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.