TN Weather : தமிழகம்.. மழைக்கு வாய்ப்பு இருக்கா? மே 1 முதல் 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் வெயில்!

By Ansgar RFirst Published Apr 29, 2024, 1:09 PM IST
Highlights

Tamil Nadu Weather Update : வரலாறு காணாத வகையில், வெயில் தமிழகத்தை மட்டுமல்ல உலக அளவில் பல்வேறு இடங்களை வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் மே 1 முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார். குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சேபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 14 இடங்களில் மே 1 முதல் 4ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, இதே காலகட்டத்தில், சேலம், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட வட உள் பகுதிகளில் மே 4 அல்லது 5 ஆம் தேதிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கண்டித்துள்ளார். தனது முகநூல் பதிவில் இதுகுறித்து அவர் தெளிவாக கூறியுள்ளார்.

Food Safety : உதகையின் பிரபல ஹோட்டல்.. தக்காளி சாஸில் நெளிந்த புழுக்கள் - விஜய் பட நடிகர் பரபரப்பு புகார்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஒன்பது மாவட்டங்களில் 40.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் அதிகபட்சமாக 42.0 டிகிரி செல்சியஸ் (+3.6 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவானதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதே போல ஈரோடு தவிர மற்ற எட்டு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40°Cக்கு மேல் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் 41.6 C, சேலம் 41.5C, கரூர் பரமத்தி 41C , தர்மபுரி 41.C, திருத்தணி 40.4C, வேலூர் 40.3C, திருச்சி 40.1C, நாமக்கல் 40.0 டிகிரி செல்சியஸ்'' என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகவே குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகளில் வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் கடலோரப் பகுதிகளில் 34°C முதல் 38°C வரையிலும், மலைப்பகுதிகளில் 22°C முதல் 31°C வரையிலும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரம் வெளியின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதே நேரம் மே 4ம் தேதிக்கு பிறகு மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

வருவாய் ஈட்டுவதில் 3வது இடம் பிடித்த கோவை ரயில் நிலையம்; ரயில்வே கோட்டமாக மாற்றம்? பயணிகள் எதிர்பார்ப்பு

click me!