இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி அதிகம்.. அடிச்சு தூக்கிய பெரம்பலூர்..!

By vinoth kumarFirst Published Jun 20, 2022, 10:35 AM IST
Highlights

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இதில், மாணவ, மாணவிகள் 93.76% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இதில், மாணவ, மாணவிகள் 93.76% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 37 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜூன் 1ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி விரைவில் முடிக்கப்பட்டன. ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஜூன் 17ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிட தேர்வுத்துறை முடிவு செய்து 20ம் தேதி வெளியிட கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் தங்களது தேர்வு முடிவுகளை மாணவர்கள்,  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 

இதன்படி,  பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டுள்ளார்.  இதில், மாணவ, மாணவிகள் 93.76% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 8,50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,998 தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர்கள் 4,21,622, மாணவர்கள் 3,84,655 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.   மாணவர்கள் 85.8% பேரும், மாணவிகள் 94.38% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

* 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

* 97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடம் 

*  97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடம்

click me!