Tamilnadu Corona : தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. ஜனவரி மாதம் ஓமிக்ரான் அலை ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு குறைந்தது.
இதனிடையே நாட்டில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பல வாரங்களுக்குப் பின்னர், நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு 12 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. பாசிட்டிவ் விகிதம் அச்சமூட்டும் அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றாலும் கூட சில வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கூட கிட்டதட்ட அதேநிலை தான் என்று கூறலாம். தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையம், பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் கொரானா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி, வழக்கறிஞர்கள், அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும்.
தனிமனித விலகலை பின்பற்ற வேண்டும், கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் வழக்காடிகள் தவிர மற்றவர்கள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இரட்டை இலையை முடக்கிவிடுவேன்.. இப்படி மிரட்டாதீங்க ஓபிஎஸ்.! ரகசியத்தை உடைத்த அதிமுக பிரமுகர்