வெளியான தேர்வு முடிவுகள்.. பிளஸ் 2 வில் 93.76 % தேர்ச்சி..10 ஆம் வகுப்பில் 90.07% தேர்ச்சி..

By Thanalakshmi VFirst Published Jun 20, 2022, 10:31 AM IST
Highlights

மாநில பாட திட்டத்தின் கீழ் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 93.76 சதவீதத்தினர் தேர்த்தி பெற்றுள்ளனர்.
 

மாநில பாட திட்டத்தின் கீழ் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 93.76 சதவீதத்தினர் தேர்த்தி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை மாணவர்கள்,  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமின்றி, பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றை பதிவிட்டால் எஸ்.எம்.எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும்.  10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று நண்பகல் 12 மணிக்கு இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 90.07 % மாணவ, மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93. 76% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 வில் 4.21 லட்சம் மாணவிகள் தேர்வு எழுதியதில் 4.06 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் மாணவர்களில் 3.84 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 3.49 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96. 32 % ஆகவும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 90.96 % ஆகவும் உள்ளது.
 

மேலும் படிக்க: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்..

click me!