
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய பொது மக்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தி, 11 அப்பாவி பொது மக்களின் உயிரை பறித்திருக்கிறது, தமிழக காவல்துறை.
பெண்கள், குழந்தைகள் என இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி பொதுமக்கள் மீது, அரசு தடியடி நடத்தியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும், தங்கள் அடக்குமுறையை கையாண்டிருப்பது, அனைத்து தமிழர்கள் மத்தியிலும் இந்த போராட்டத்தை மேலும் வலுப்பெறச் செய்திருக்கிறது.
சமுதாய ஆர்வலர்கள், பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் இந்த சம்பவத்தை கண்டித்து, தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். பிரபல நடிகரான விஜய் சேதுபதியும், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
அதில்” சட்டமோ அரசாங்கமோ எவையும் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக வேண்டியே. அவையே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால் எதற்கு ஒரு அரசாங்கம் ?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கடைசியாக ”நியாபகம் இருக்கட்டும் கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே” என மெர்சல் பட பாடல் வரிகள் மூலம், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை எச்சரித்திருக்கிறார் விஜய் சேதுபதி.