‘டிஜிட்டலுக்கு’ மாறிய ஸ்ரீரங்கம்அரங்கநாதர்

First Published Dec 26, 2016, 9:08 PM IST
Highlights
‘டிஜிட்டலுக்கு’ மாறிய ஸ்ரீரங்கம்அரங்கநாதர்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பழைமையான அரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் முறை டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரங்கநாதருக்கு பணமாகவும், டெபிட், கிரெடிட்கார்டுகள் மூலம் ஸ்வைப்பிங் மெஷினும் காணிக்கை செலுத்தலாம்.

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குபின் நாட்டில் பணப்புழக்கம் குறைந்து, மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். ஏ.டி.எம்., வங்கிகளில் மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரமும், வாரத்துக்கு ரூ. 24 ஆயிரமும் எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்ட நிலையில், பணம் இல்லாததால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.

இதனால், நாடுமுழுவதும் தொழிற்சாலைகள், சிறுதொழில்கள், வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு கோயில்களும் தப்பவில்லை. கோயில்களிலும் உண்டியல் வருமானம் குறைந்தது, சிறப்பு கட்டண தரிசன வசூலும் சரிந்தது.

இதையடுத்து, முதல் கட்டமாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை செலுத்தவும், நுழைவுக்கட்டணம் செலுத்தவும் ஸ்வைப்பிங்எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

 திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்வைப் மெஷின் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர், இந்து அறநிலையத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கோயில் அலுவலகம், பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, தகவல் மையம், யாத்ரீகர் நிவாஸ் உள்ளிட்ட 5 இடங்களில் ஸ்வைப் மெஷின் வைக்கப்பட்டுள்ளன. தரிசனம், அபிஷேக கட்டணம், தங்கும் விடுதிக்கான கட்டணம், நன்கொடை உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் கார்டுகள் மூலமாகவும் செலுத்தலாம்.

இதற்கிடையே பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல் அருகே ஸ்வைப்பிங்மெஷின் எந்திரங்கள் 5 வைக்கப்பட்டுள்ளன. காணிக்கை செலுத்த பணம் இல்லாத பக்தர்கள் தங்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் காணிக்கை செலுத்தி ரசீதை பெற்றுச் செல்லலாம்.

இதற்கான ஸ்வைப்பிங் மெஷின்களுக்கான பூஜை நேற்று நடந்தது. முதலாவதாக ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் கார்டுமூலம் ஸ்வைப் செய்து காணிக்கை செலுத்தினார்.

click me!