சசிகலாவை வரிசையில் நின்று கை கூப்பி வணங்கிய ஜெயலலிதா , MGR,பசும்பொன் தேவர் , நேதாஜி.....

Asianet News Tamil  
Published : Dec 26, 2016, 07:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
சசிகலாவை  வரிசையில்  நின்று கை கூப்பி  வணங்கிய  ஜெயலலிதா , MGR,பசும்பொன் தேவர் , நேதாஜி.....

சுருக்கம்

முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், சசிகலாவை  நாள்தோறும், சசிகலாவை  அதிமுக  தொண்டர்கள்,  மற்றும் பொதுமக்கள்  பலரும்  சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில்   ஏற்கனவே,  பல்கலைக்கழக  துணை வேந்தர்கள்   11   பேர் வந்து, சசிகலாவை  சந்தித்து  ஆறுதல்   தெரிவித்தனர். இந்த  விவகாரம்  சர்ச்சையை  ஏற்படுத்தியது. இது தொடர்பாக  பல்வேறு  அரசியல் கட்சியினர்   கண்டனம்  தெரிவித்தனர்.

இந்நிலையில்,  “அம்மா” போன்றே  வேடமணிந்து  “ சின்னம்மா வை “ பார்க்க  வந்துள்ளார்கள்  என  நெட்டி சன்கள்  கிண்டல்  அடித்து  வருகிறார்கள்.

இன்று, ஜெயலிதா போன்று  வேடமளித்தும், எம் ஜி ஆர் , பசும்பொன் தேவர் , நேதாஜி , அம்பேத்கார் ,  அப்துல்  கலாம்  என  வேடமிட்டு, அனைவரும் நீண்ட  வரிசையில்  நின்று  சசிகலாவை , கை எடுத்து கூப்பி   வணங்கிய காட்சி , தற்போது  சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

என்னடா  இது  தேவருக்கு  வந்த  சோதனை ...? நேதாஜி  என்னடா  பாவம்   பண்ணாரு..... அதிமுக வை  ஆரம்பிச்சு  எம் ஜி ஆர்  வரை  வரிசையில்  என  பல  நெட்டி சன்கள்  கிண்டல்  செய்ய  தொடங்கியுள்ளனர்......

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
டெலிவரி ஊழியருக்கு சரமாரி வெட்டு.. சென்னையில் போதை கும்பல் வெறியாட்டம்.. ஷாக் வீடியோ!