போயஸ் கார்டனில் உண்மையில் போலீசார் எண்ணிக்கை குறைக்கப்பட்டதா?

First Published Dec 26, 2016, 6:00 PM IST
Highlights


போயஸ் தோட்டத்தில் பாதுகாப்பு போலீசார் குறைக்கப்பட்டது போல் கண்பிக்கப்பட்டாலும் உண்மையில் அதே அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் நீடிப்பதாகவே போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
போயஸ் கார்டனில் முதல்வருக்கு கொடுப்பது போல் போலீஸ்  பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அங்கு யாரும் அரசு பதவியில் இருப்பவர்கள் இல்லையே என்ன் அவ்வளவு போலீசார் என்று திமுக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் , பாஜக  தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி இருந்தனர்.  
இந்த பிரச்சனை பரவலாக எதிரொலிக்க தொடங்கி உள்ளது. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவருக்காக என்.எஸ்.ஜி பாதுகாப்பு , கோர்செல் , செக்யூரிட்டி சென்னை போலீஸ் பாதுகாப்பு துணை ஆணையர் டாக்டர் .சுதாகர் தலைமையில் போடப்பட்டிருந்து. ஆனால் தற்போது டாக்டர் சுதாகர் ஓபிஎஸ் பாதுகாப்பு பணிக்கு மாற்றப்பட்டு தொடர்கிறார்.


இதற்காக 240 போலீசார் 3 ஷிப்டுகள் பணியாற்றினர். முதல்வர் மறைவுக்கு பின்னரும் அதே பாணியில் அனைவரும் பணியாற்றினர். ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன்பும் சரி, தற்போதும் சரி. அவரின் வீடு இருக்கும் தெரு தொடங்கி, அவரின் வீடு வரை, கடுமையான கெடுபிடிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. 
கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள், அமைச்சர்கள் என போலீசாரை தாண்டி உள்ளே செல்ல முடியாது. அங்கு, தமிழக காவல்துறையின் மேற்சொன்ன பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எதிர்கட்சிதலைவர்கள் கேள்வி எழுப்பவே தற்போது போலீசார் எண்ணிக்கை குறைக்கப்பட்டது போல் காண்பிக்கப்பட்டுள்ளது.


ஆனால் போலீஸ் வட்டாரத்தில் கிடைத்த தகவல் என்னவென்றால் வெளியே பேருக்கு 20 போலீசாரை நிறுத்தியுள்ளனர். ஆனால் கார்டன் உள்ளே அதே அளவு கோர்செல் ,  செக்யூரிட்டி சென்னை போலீசார், என்.எஸ்.ஜி போலீசார் எண்ணிக்கையை குறைக்கவில்லை , மாறாக அவர்கள் மஃப்டியில் டூட்டி பார்க்க மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்களாம். வாக்கி டாக்கியை மறைத்து வைத்து உபயோகிக்கவும் உத்தரவாம்.
இது தவிர கூடுதல் பாதுகாப்புக்கு பவுன்சர்கள் எனப்படும் தனியார் செக்யூரிட்டி ஊழியர்களை அமர்த்தியுள்ளனர். இவர்கள் போலீசார் போல் சஃபாரி உடை அணிந்து கொண்டு போயஸ் தோட்ட சாலையில் நின்று கொண்டு போவோர் வருவோரை விசாரிக்க துவங்கி விட்டனர்.

click me!