வர்தா புயல் பாதிப்பு : நாளை சென்னை வருகிறது மத்திய குழு

First Published Dec 26, 2016, 4:13 PM IST
Highlights


தமிழகத்தில் வர்தா புயலால் பாதிக்‍கப்பட்ட பகுதிகளை பார்வையிட 8 பேர் கொண்ட மத்திய குழு, நாளை சென்னை வரவுள்ளது. பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை இக்குழு பார்வையிடுகிறது.

முதலமைச்சர் O. பன்னீர்செல்வம், டெல்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து, வர்தா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்‍கு நிவாரணநிதி வழங்கவேண்டும் என்றும், சேதங்களை சீரமைக்‍க 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். உடனடியாகஆயிரம் கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார். 

மேலும்,புயலால் பாதிக்‍கப்பட்ட பகுதிகளைநேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைந்து அனுப்புமாறும் முதலமைச்சர் கோரிக்‍கை விடுத்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் வர்தா புயலால் பாதிக்‍கப்பட்ட பகுதிகளை பார்வையிட, 8 பேர் கொண்ட மத்திய குழு, நாளை சென்னை வரவுள்ளது.

பிரவீன் வசிஸ்டா தலைமையிலான இந்தக்‍ குழுவினர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்‍கப்பட்ட பகுதிகளை நேரில்பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்த விவரங்களை அறிக்‍கையாக மத்திய அரசிடம் அளிப்பார்கள்.

 

click me!