ஜெ வின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு தனியார் பாதுகாவலர்கள்…ஸ்டாலின் கேள்வி எதிரொலி…

First Published Dec 26, 2016, 2:10 PM IST
Highlights


ஜெ வின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு தனியார் பாதுகாவலர்கள்…ஸ்டாலின் கேள்வி எதிரொலி…

மறைந்த முதலமைச்சர் ஜெ வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தில், 1 எஸ்.பி.,4 ஏடிஎஸ்பிக்கள்.,4 டிஎஸ்பிக்கள், 7 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 240 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அங்கு ஜெவின் தோழி சசிகலா வசித்து வருகிறார். அவருக்கு அரசுப் பணி ஏதும் இல்லாத நிலையிலும் தொடர்ந்து அங்கு 240 போஸீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது ஏன் என கேள்வி எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் இது தொடர்பாக திமுக பொருளாளர் ஸ்டாலின், முதலமைச்சர் ஓபிஎஸ் க்கு எழுதிய கடிதத்தில், ஜெ இறந்த பிறகும் போயஸ் தோட்ட இல்லத்தில் போஸீஸ் பாதுகாப்பு ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார். உடனடியாக அரசு பாதுகாப்பை வாபஸ் பெறவில்லை என்றால் அதை சட்டரீதியாக சந்திக்கப்போவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த போஸீஸ் பாதுகாப்பு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தனியார் பாதுகாப்புப் படையினர் அங்கு பாதுகாப்புப் ப ணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 6 மணி முதல் 2 மணி வரை 20 தனியார் பாதுகாவலர்களும், 2 மணி முதல் இரவு 10 மணி 20 தனியார் பாதுகாவலர்களும் காவலுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இரவுக்கு 20 க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் 12 போஸீசார் மட்டும் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

click me!