சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தம்… பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published Sep 19, 2022, 11:58 PM IST
Highlights

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது ஸ்விகியின் புதிய நடைமுறையில் இது போன்ற ஊக்கத்தொகைகள் தவிர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வேலை பார்க்கும் நேரம் 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில்  ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மரண பயத்தில் ஜி.பி.முத்து… பைக்கில் பறக்கும் TTF வாசன்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

இதுக்குறித்து அவர்கள் கூறுகையில், ஏற்கனவே இருந்த வேலை நேரப்படி 12 மணி நேரம் வேலை பார்த்தால் வாரம் ரூ.14500 வரை கிடைக்கும். ஆனால் தற்போது 16 மணி நேரம் பார்த்தால் கூட12000 ஆயிரம் ரூபையை கூட பெற முடியாது. எங்களுக்கான பெட்ரோல் செலவு, உணவு செலவு, வாகன செலவு போக வாரம் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே எங்களுக்கு கிடைக்கும். புதிய விதிகளின் படி எவ்வளவு வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் வழங்கப்படும். மேலும் பழைய நடைமுறையின்படி ஊக்க தொகை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும்.

இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்த 2 இளைஞர்கள்... செல்பி எடுக்கையில் நேர்ந்த விபரீதம்!!

சென்னையில் சுவிகி உணவு விநியோகம் செய்யும் பகுதிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மண்டலங்களில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள மண்டலங்களிலும் புதிய சம்பள நடைமுறையை கொண்டு வருவார்கள். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி எங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. வருமானம் குறைகிறது. முன்பு வழங்கப்பட்டது போலவே வார ஊக்கத் தொகையை வழங்கும் வரை நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். 

click me!