பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, மற்றொரு யூடியூபர் வாசன் என்பவருடன் அதிவேகமாக பைக்கில் சென்ற வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, மற்றொரு யூடியூபர் வாசன் என்பவருடன் அதிவேகமாக பைக்கில் சென்ற வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனலில் பைக்குகளில் வேகமாக போவதையும் சாகசங்கள் செய்வதையும் பதிவிட்டு பிரபலமானவர் Twin throttlers யூடியூப் சேனலை நடத்தி வரும் கோவையை சேர்ந்த வாசன். இவர் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அப்போது கூடிய கூட்டத்தை கண்டு இணையத்தில் வாசனை பலர் விமர்சனம் செய்தனர். மேலும் இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்த 2 இளைஞர்கள்... செல்பி எடுக்கையில் நேர்ந்த விபரீதம்!!
இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட டிடிஎஃப் வாசன், தான் பயிற்சி எடுத்துக் கொண்டே இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்பட்ட வீடியோ ஜமுனா ஹைவேஸ் சாலையில் எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்திருந்தார். இதனால் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபல யூட்யூபருமான ஜி.பி.முத்துவை சந்தித்த வாசன், அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டி சென்றார்.
இதையும் படிங்க: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு... புதிய பொறுப்புத் தலைமை நீதிபதி நியமனம்!!
அப்போது ஜி.பி.முத்து பயத்தில் அலறினார். இருந்த போதும் லாரி உள்ளிட்ட வாகனங்களை வேகமாக ஓவர்டேக் செய்தார் வாசன். இந்த பயணத்தின் போது வாசன் ஹெல்மட் அணிந்திருந்த நிலையில் அவருக்கு பின் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியாமல் இருந்தார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் சாலை பின்னால் ஒருவரை அமரவைத்து அவருக்கும் ஹெல்மெட் அணிவிக்காமல் இவ்வளவு வேகமாக சென்ற வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனாம் வாசன் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.