முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின் சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன்பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.20,500 அபராதம், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், ஜனவரி 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் முதன்மை அமர்வு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்தது.
இதனிடையே, இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 6ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதை தள்ளி வைக்க அறிவுறுத்தியது. ஆனால், ஆனால், வேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில், ராஜேஷ் தாஸின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே விழுப்புரம் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் மேல்மறையீட்டு மனு மீது விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா கடந்த ஜனவரி 24ஆம் தேதி தீர்ப்பளிக்க இருந்தார். ஆனால் ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகவில்லை. இதனால், கோபமடைந்த நீதிபதி, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜனவரி 29ஆம் தேதி (இன்று) கண்டிப்பாகநேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜன.31ஆம் தேதி வரை நீட்டிப்பு!
அதன்படி, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேல்முறையீட்டு வழக்கில் ராஜேஷ் தாஸ் தரப்பில் வாதிட ஜனவரி 31ஆம் தேதி கடைசி வாய்ப்பு என்றும், அன்றைய தினம் வாதிடவில்லை என்றால் பிப்ரவரி 3ஆம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் மீண்டும் எச்சரித்து வழக்கை 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த அரசு திட்டம்? பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இதனிடையே, தன் மீதான வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரிக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் மார்ச் மாதத்திற்குள் விசாரணையை முடிவுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.