செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜன.31ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Published : Jan 29, 2024, 03:43 PM IST
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜன.31ஆம் தேதி வரை நீட்டிப்பு!

சுருக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டக் கொண்டே வருகிறது. அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இது என்ன நீதிமன்றமா ரயில்வே பிளாட்பார்மா? வழக்கறிஞருக்கு செமத்தியா டோஸ் கொடுத்த நீதிபதி சந்திரசூட்!

வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுத்து விட்டது.

சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

இருப்பினும், மருத்து ஜாமீன் கோராமல் சாதாரண ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும் செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி 3ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து, அவரது  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

“அரசியலில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” - அண்ணாமலை திட்டவட்டம்
100 பேரிடம் தலா ரூ.3 லட்சம் வசூல் வேட்டை..! சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டில் திமுக ஒ.செ-க்கள் தில்லுமுல்லு..!