சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு

By SG BalanFirst Published Jul 21, 2024, 9:56 PM IST
Highlights

சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளிலும் மது விற்பனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுபானத்தை சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலமாகவும் விற்பனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்குப் பதிலாக, சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக மதுபான விற்பனை செய்ய அனுமதி கோரியும், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Latest Videos

சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் முரளிதரன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பெரும்பாலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களே டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை செய்கின்றன என்றும் இதனால் டாஸ்மாக்கில் குறிப்பிட்ட சில பிராண்டு மது பானங்கள் மட்டுமே கிடைக்கின்றன என்றும் தனது மனுவில் கூறியுள்ளார்.

பாட்டில்களில் குறிப்பிட்டிருக்கும் விலையை விட அதிகமாக விலை கொடுத்து வாங்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும், கள் விற்பனைக்கான தடையை நீக்கி, சில கட்டுப்பாடுகளுடன் கள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள எல்லா நிறுவனங்களிடம் இருந்தும் மதுபானங்களை வாங்க விற்க வேண்டும் என்றும் சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகள் மூலமும் மது விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

click me!