Super Star Rajinikanth : "கலைஞர் எனும் தாய்" என்ற புத்தக வெளியிட்டு விழா, இன்று சென்னையில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட, அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி குறித்த "கலைஞர் எனும் தாய்" என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. திமுக அமைச்சர் ஏ.வா வேலு இந்த புத்தகத்தை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை சுமார் 6 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த புத்தகத்தை வெளியிட்ட நிலையில், முதல் பதிப்பை பெற்றுக்கொண்டு சிறப்பித்தார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த புத்தக வெளியீடு குறித்தும், கலைஞர் கருணாநிதி குறித்தும் தி இந்து நிறுவனத்தின் ராம் பேசுவையில் "ஐந்து முறை முதல்வராகவும், 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு அரசியலில் பெரிய அளவில் சாதித்தவர் கலைஞர்". அவருடைய அரசியல் பயணத்தை சமன் செய்ய யாராலும் முடியாது, என்று புகழாரம் சூட்டினார். அவரை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் இந்த புத்தக வெளியீட்டு குறித்து பேசினர். இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த புத்தக வெளியீட்டு குறித்து பேசினார்.
undefined
"உங்கள வேடிக்கை பார்ப்பது வேற.. ஓட்டு போடுறது வேற" விஜயின் அரசியல் என்ட்ரி - பொங்கிய கருணாஸ்!
24 நிமிடங்கள் பேசிய சூப்பர் ஸ்டார்
"அறிவந்தர அறிஞர் பெருமக்கள் உள்ள சபையில், பேசாமல் இருப்பதே அறிவாளித்தனம்.. ஆனால் வேறு வழியில்லை நான் பேசித்தான் ஆகவேண்டும். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்.. அவர்களை யாராலும் அசைக்கமுடியாது. குறிப்பாக இந்த புத்தகத்தை எழுதிய ஏ.வா வேலு பற்றி கலைஞர் பேசும்போது, ஏவாமலே நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றல் கொண்டவர் வேலு என்று தான் குறிப்பிடுவர்".
துரை முருகனை கலாய்த்த ரஜினி
சுமார் 24 நிமிடங்கள் மேடையில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இறுதி இரண்டு நிமிடத்தில் தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தினார். "ஒரு ஆசிரியர், தன்னிடம் உள்ள புதிய மாணவர்களை எளிதாக கையாண்டுவிடுவார். ஆனால் இந்த பழைய மாணவர்கள் இருக்கின்றார்களே, அவர்களை சமாளிப்பது மிகவும் கடினம். இங்கும் பல விவகாரமான பழைய மாணவர்கள் பல பேர் இருக்கின்றனர். சும்மா Fail ஆகிவிட்ட இங்கு இருக்கும் மாணவர்கள் அல்ல.. பயங்கரமாக ரேங்க் எடுத்து அசத்திய பழைய மாணவர்கள் அவர்கள்."
"அதிலும் குறிப்பாக துரைமுருகன் என்று ஒரு பழைய மாணவர் இருக்கின்றார், அவர் கலைஞர் கண்ணிலேயே விறல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஒரு விஷயம் குறித்து அறிவுரை கேட்டால், அதற்கு அவர் தரும் பதில் நமக்கு புரியவே புரிந்து. ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட மாணவர்களை கையாளும் நண்பர் ஸ்டாலினுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்" என்று அந்த அரங்கமே சிரிப்பு அலையில் முழுகும் வண்ணம் பேசிய அமர்ந்தார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
120 ஆடுகள்.. 21 மாடுகள்... பிரமாண்ட படையலுடன் நரிக்குறவர்கள் கொண்டாடிய திருவிழா!