"உங்கள வேடிக்கை பார்ப்பது வேற.. ஓட்டு போடுறது வேற" விஜயின் அரசியல் என்ட்ரி - பொங்கிய கருணாஸ்!

By Ansgar R  |  First Published Aug 24, 2024, 7:07 PM IST

Actor Karunas : தளபதி விஜய் அரசியல் களத்தில் இறங்கவுள்ளது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார் நடிகர் கருணாஸ்.


கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் தனது திரைப்படங்களில் அதிக அளவில் அரசியல் பேசியது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான "தலைவா" திரைப்படத்தில் "டைம் டு லீட்" என்கின்ற வாசகங்கள் அவருடைய ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து வெளியான "மெர்சல்" மற்றும் "சர்க்கார்" போன்ற திரைப்படங்களிலும் அதிக அளவில் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து பேசப்பட்டது. இந்த சூழலில் தான் இவ்வாண்டு துவக்கத்தில் தனது "தமிழக வெற்றிக் கழகம்" கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி விஜய் மக்களுக்கு வெளியிட்டார். 

Tap to resize

Latest Videos

undefined

அய்யயோ அவரா? ரஜினியோடு கைகோர்க்க கன்னட உலகில் இருந்து ஆளை இறக்கும் லோக்கி - யார் அது?

ஆனால் அது ஒருபுறம் இருக்க, தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு, தனது திரை வாழ்க்கைக்கு குட் பை சொல்ல உள்ளதாகவும். அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தளபதி விஜய் அறிவித்தது தான் "மாஸ்டர் ஸ்ட்ரோக்". உண்மையில், பலரையும் ஈர்த்தது இந்த ஒரு விஷயம் தான். 

ஏனென்றால், விஜய் பீல்டு அவுட் ஆன ஒரு நடிகராக இருந்து, அதன் பிறகு அரசியலுக்கு சென்றால் அது வேறு விதமாக பேசப்பட்டிருக்கும். ஆனால் அவர் எத்தனை கோடி கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும், அவரை வைத்து எத்தனை திரைப்படங்களை வேண்டுமானாலும் இயக்க இயக்குனர்களும் தயாராக இருக்கும் நிலையில், அவர் திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ளதால், நிச்சயம் அவர் மக்களுக்கு நல்லது செய்யத் தான் அப்படி ஒரு பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இருப்பினும் தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து பலரும் காட்டமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த சூழலில் நடிகரும், அரசியல் தலைவருமான கருணாஸ் அளித்த ஒரு பேட்டியில், விஜய் குறித்து கேட்ட பொழுது, "அரசியல் விஜய் நினைப்பதுபோல எளிதல்ல, இன்று விஜயையும், உதயநிதியையும் ஒரு நடிகராக நீங்கள் ஒப்பிட்டால், அதில் நிச்சயம் விஜய் தான் ஜெயிப்பார். காரணம் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர்". 

"ஆனால் அதே போல உதயநிதியையும், விஜயையும் ஒரு அரசியல் தலைவராக ஒப்பிடும் பொழுது அதில் அதிக அனுபவம் உதயநிதி ஸ்டாலினுக்கு தான் உள்ளது. விஜயை போலத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வைகைப்புயல் வடிவேலு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க தொடங்கினார். அப்போது வடிவேலு தனது கலை பயணத்தின் உச்சியில் இருந்தார். ஆனால் அவருடைய பேச்சு ஓட்டாக மாறவில்லை".

"சில ஆண்டுகள் அவர் திரைத்துறையை விட்டே காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு விஷயங்கள் நடந்து வருகிறது. அதில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு விஜய் குரல் கொடுத்திருக்கிறாரா? அதைப்பற்றி பேசி இருக்கிறாரா? என்று கேட்டால் இல்லை. ஆனால் இப்போது மட்டும் தனது திரைப்படங்கள் வழியாக தனது அரசியல் வருகை குறித்து பேசிவிட்டு இப்பொழுது கட்சியை அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல" என்று கருணா பேசியுள்ளார். 

நீ தான் எல்லாத்துக்கும் காரணம்.! சமந்தாவால் பெத்த பிள்ளை நாக சைதன்யா மீது கடும் கோபத்தில் லட்சுமி டகுபதி!

click me!