நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சகோதரர் திரு. சத்ய நாராயணன் மதுரையில் இன்று செப்டம்பர் 3ம் தேதி, இரண்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி, தாலியை எடுத்து கொடுத்து ஆசி வழங்கி சென்றார்.
பின்னர் அவர் அங்கிருந்து புறப்படும்போது செய்தியாளர் அவரிடம் சில கேள்விகளை கேட்க, அவரும் நிதானமாக பதில் கூறினார். ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா ராவ்விடம், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்ததில் ஏதேனும் அரசியல் நோக்கம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து சத்யநாராயணா ராவ் கூறியதாவது, ஓபிஎஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவர் இடையேயான சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு என்றும், அதில் அரசியல் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
undefined
வந்துட்டாருயா.. வேட்டையன் ராஜா வந்துட்டாரு.. ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 - வெளியான ட்ரைலர்!
மேலும், ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி எதுவும் கிடைக்குமா? அதற்கு வாய்க்குள் உள்ளதா என்றும் அவரிடம் கேள்விகளை கேட்டனர். இதற்கு பதிலளித்த சத்யநாரயணா அது இறைவன் கையில் தான் உள்ளது, ஆனால் ரஜினிக்கு அதில் விருப்பம் இல்லை. அதே சமயம் "வந்தால் வேண்டாம் என்பதற்கு இல்லை.. வரட்டும்" என்றார்.
இதனை தொடர்ந்து தனது சகோதரர் ரஜினிக்கு அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். இந்த பேட்டியின்போது மதுரை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் அவருடன் இருந்தனர்.