மகிழ்ச்சி செய்தி..! மாணவர்களே அலர்ட்.. நாளை முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாட்கள் விடுமுறை..?

By Thanalakshmi VFirst Published May 13, 2022, 10:44 AM IST
Highlights

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படும் நிலையில் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 
 

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படும் நிலையில் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (மே 14) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடைசி நாளான இன்று (மே 13) உடற்கல்வி தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன்பின் மாணவர்களுக்கு நாளை முதல் (மே 14) ஜூன் 12-ம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க: இனி ஆண்டுதோறும் சொத்து வரி விர்ர்ர்... மக்கள் பணியாற்றவே புதிய சட்டம்.. விலாவரியாக விளக்கும் கே.என். நேரு!

ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். கோடை விடுமுறையில் விருப்பப்படும் மாணவர்கள், அவரவர் வீடுகளின் அருகில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் 2 ஆம் தேதி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன் படி, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதே போல், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றும் வரும் நிலையில்,  30 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

மேலும் படிக்க: Asani : அசானி புயல் எதிரொலி.. 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

click me!