சதுரகிரி கோவிலுக்கு இன்று முதல் அனுமதி.! ஆனால் ஒரு கண்டிஷன் ?

By Raghupati RFirst Published May 13, 2022, 8:35 AM IST
Highlights

Sathuragiri Hills : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 16ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படப்மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Asani : அசானி புயல் எதிரொலி.. 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

இதையும் படிங்க : Chhattisgarh : சத்தீஸ்கர் மாநிலத்தில் விமான விபத்து.. 2 விமானிகள் மரணம் !

click me!