
திருச்சியில் பிரிசித்தி பெற்று விளங்கும் மலைகோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.தென்கயிலாயம், தட்சிணா கயிலாயம் என்று போற்றப்படுகிறது திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில். மேலும் இங்கு சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்தவாறு மிக பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சிவபெருமான் தாய் வடிவில் வந்து ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சுகபிரவதம் பார்த்ததாக நம்பப்படுவதால், தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார். புகழ்பெற்ற இக்கோவில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா 10 நாள்களுக்கு சிறப்பாக கொண்டாப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் மே 6 ஆம் தேதி சுவாமி அம்பாள் கிளி வாகனத்திலும், 7 ஆம் தேதி பூதம், கமலம் வாகனத்திலும், 8 ஆம் தேதி கைலாசபர்வதம் அன்னம் வாகனத்திலும் வீதி உலா வரும் நிகவ்வு நடைபெற்றது.அதனைதொடர்ந்து மே 9 ஆம் தேதி நூற்றுக்கால் மண்டபத்தில் செட்டிப்பெண்ணத்து மருத்துவம் பார்க்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த செவ்வாய் அன்று சுவாமி அம்பாளுக்கு திரு கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு சுவாமி, அம்பாள் நந்திகேசுவரர் யாளி வாகனத்திலும், நேற்று தங்க குதிரை, பல்லக்கு வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று அதிகாலை தொடங்கியது. மலைக்கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் தேர் வலம் வந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேஷ லக்னத்தில் திருத்தேர் வலம் பிடிக்கப்பட்டது. தேரோட்டைத்தை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதியில் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுக்காப்பும் போடப்பட்டுள்ளது.
தேரோட்டத்தை தொடர்ந்து நாளை காலை நடராஜர் தரிசனம், பகலில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. மேலும் அன்று இரவு வெள்ளி ரிஷபக் காட்சி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறும். அதனைதொடர்ந்து மே 15 ஆம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் வீதியுலா, மே 16 ஆம் தேதி மாலை 5 மணியளவில் தாயுமான அடிகள் உற்சவம், மே 17 ஆம் தேதி பிச்சாடனார் வீதியுலா, மே 18 ஆம் தேதி இரவு சண்டிகேஸ்வர் வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் படிக்க: சதுரகிரி கோவிலுக்கு இன்று முதல் அனுமதி.! ஆனால் ஒரு கண்டிஷன் ?