திடீர் ட்விஸ்ட்.. கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அதிரடி மாற்றம்..

By Ramya s  |  First Published Apr 29, 2023, 5:34 PM IST

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றப்பட்டுள்ளார். 


ஜெயலலிதா மரணத்திற்கு பின், அவருக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி நள்ளிரவில் கோடநாடு பங்களாவின் ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இஉர்ந்த பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டன. மேலும் இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களில் கோடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார். 

இந்த வழக்கில் தொடர்புடையா சயான், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை அதனை த் ஒடர்ந்து நடைபெற்ற கொலைகள், விபத்துகள் ஆகியவை பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க : மன்னிப்பு கேளுங்க.. இல்ல ரூ.500 கோடி நஷ்ட ஈடு கொடுங்க.. ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்..

இதனிடையே தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியது. தொழிலதிபர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, சசிகலா, அவரின் உறவினர் விவேக் அதிமுக பிரமுகர்கள் என சுமார் 300 பேரிடம் விசாரணை நடைபெற்றது. 

இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கடந்த ஒரு மாதத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை கடந்த ஓராண்டாக விசாரித்து வந்த நீதிபதி முருகன் விசாரித்து வந்தார். வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி முருகன் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி  அப்துல் காதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க : ANI செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கம்! 13 வயதுகூட ஆகாததால் நடவடிக்கை!

click me!