திண்டுக்கலில் லாரி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

By Velmurugan s  |  First Published Apr 29, 2023, 4:06 PM IST

திண்டுக்கல் அருகே நின்று கொண்டிருந்த தனியார் சரக்கு வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், 16 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவையில் இருந்து தேனி நோக்கி இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை சௌந்தர்ராஜ பெருமாள் ஓட்டி வந்தார். பேருந்தில் நடத்துநர் வேல்முருகன் உள்பட 45 பயணிகள் வந்து கொண்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி, தெத்துப்பட்டி அருகே    வந்து கொண்டிருந்த போது சாலையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. 

இதில் பேருந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் கோவையைச் சேர்ந்த பெயிண்டர் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கோவையில் இருந்து கேரளா சென்ற மகாலட்சுமி (23), ஸ்வேதா (24), ரேவதி (23), மகேஸ்வரி (23), உத்தமபாளையம் கார்த்திகேயன் (20), கோவை கணவாய் சேர்ந்த முருகேஸ்வரி (32), விசாலினி (14) கயல்விழி (12) , மற்றும் டிரைவர் சௌந்தர்ராஜ பெருமாள் (38), கண்டக்டர் வேல்முருகன் (35) உள்ளிட்ட 16க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

Crime News: கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கன்னிவாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 100 ரூபாய்க்காக பலூன் விற்கும் பெண்ணின் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு

click me!