Palani Rope Car : பழனி மழை முருகன் கோவிலில் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கியது! பக்தர்கள் உற்சாகம்!

By Dinesh TG  |  First Published Apr 27, 2023, 6:27 PM IST

பழனி மலை முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் துவங்கப்பட்டது.
 


திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம், மேலும் இரண்டு நாட்களாக நடைபெற்ற பராமரிப்பு பணிகளில் ரோப்காரில் உள்ள சாப்ட்டுகள், பெட்டிகள்,கம்பி வடம் , உருளைகள் உள்ளிட்ட பணிகள் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது. வழக்கம்போல் இன்று ரோப் கார் சேவை துவங்கபட்டு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

click me!