கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் நீர்வரத்து அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியது இவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வந்தனர். இந்நிலையில் அதிகாலை முதலே மேக மூட்டம் நிலவியது, இதனையடுத்து இரவு 7−மணி முதல் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்தது.
இந்த மழையால் கொடைக்கானல் வத்தலக்குண்டு மவைச் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் அதிகமாகச் செல்கிறது. மேலும் சாலைகளில் கற்கள் சிதறிக்கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் சிதறிக் கிடக்கும் கற்களை சரி செய்யப்படும் பணி நடைபெற்று வருவதால் படிப்படியாக போக்குவரத்து சரி செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொடைக்கானலில் குளிர்ச்சி நிலவிவருகிறது.