கால்நடைத் துறையில் தொழில் தொடங்க ஆர்வமுள்ளதா? இதோ உங்களுக்கான அறிவிப்பு!!

By Narendran S  |  First Published Oct 4, 2022, 11:03 PM IST

கால்நடைகள் சார்ந்த தொழில் முனைவோருக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு கால்நடை பெருக்கத்தில் பங்கு பெற்று பயன் பெறுமாறு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.  


கால்நடைகள் சார்ந்த தொழில் முனைவோருக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு கால்நடை பெருக்கத்தில் பங்கு பெற்று பயன் பெறுமாறு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இத்திட்டத்தின் கீழ் கோழி வளர்க்க முனைவோர் 1000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் + 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும். 

இதையும் படிங்க: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி… உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

Tap to resize

Latest Videos

பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் + 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகப்பிற்காக ஓராண்டில் 2000-2400 மெட்ரிக் டன் வைக்கோல் / ஊறுகாய் புல் /ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம் / தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தனி நபர், சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு(FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவர். முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என்பது உண்மையில்லை… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!!

தொழில்முனைவோர்/தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும், திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும். பயன் பெற விரும்புவோர் https://nim.udyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் இத்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்தும் நிறுவனமான தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின் படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும். பின்னர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற அனுப்பப்படும். பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் இரு தவணைகளில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  

click me!