விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என்பது உண்மையில்லை… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!!

By Narendran SFirst Published Oct 4, 2022, 7:55 PM IST
Highlights

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தில் விருப்பப்படுபவர்கள் வேண்டுமென்றால் பணம் கொடுத்து பயணம் செய்யலாம் என்று வெளியான தகவல் உண்மையில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். 

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தில் விருப்பப்படுபவர்கள் வேண்டுமென்றால் பணம் கொடுத்து பயணம் செய்யலாம் என்று வெளியான தகவல் உண்மையில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் அமைச்சர் பொன்முடி பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை ஓசி பேருந்து என குறிப்பிட்டார். இது சர்ச்சையானதை அடுத்து அமைச்சர் பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தன. இதை அடுத்து அமைச்சர் பொன்முடி, தான் வழக்கு மொழியில் ஓசியென கூறியதை சிலர் தவறாக புரிந்துக்கொண்டதாக விளக்கமளித்தார். இந்த சம்பவத்திற்கு இடையே மூதாட்டி ஒருவர், நான் இலவசமாக பயணிக்க மாட்டேன். டிக்கெட்டிற்கு பணம் கொடுத்து தான் பயணிப்பேன் என நடத்துநரிடம் அடம் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க: நீதிமன்றம் சொன்னால் நாங்கள் நிற்க வேண்டுமா? நடத்துநரின் ஆணவ பேச்சால் பயணிகள் அதிர்ச்சி

மேலும் விசாரணையில் அவர் அதிமுகவினர் தூண்டதலில் பேரில் இவ்வாறு செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இவ்வாறாக பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் குறித்து அடுத்தடுத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க, விருப்பப்படுபவர்கள் வேண்டுமென்றால் பணம் செலுத்தி டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம் என்று கூறுவது வதந்தி என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: தாம்பரத்தில் ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்; 4 பேர் கைது

இதுகுறித்து விளக்கமளித்த போக்குவரத்து துறை அதிகாரிகள், அவ்வாறு வெளியான செய்தி போலியானது எனவும் இந்த திட்டம் வழக்கம் போல் தொடரும் எனவும் கூறினர். மேலும் சென்னையில் மட்டும் நாள்தோறும் 10,50,000 பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர் என தெரிவித்தனர். மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது எனவும் வேண்டுமென்றால் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 

click me!