தாம்பரத்தில் ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்; 4 பேர் கைது

By Dinesh TG  |  First Published Oct 4, 2022, 6:09 PM IST

தாம்பரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தனிபடை காவல் துறையினர் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யபட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்து நான்கு பேரை சிறையில் அடைத்தனர்.
 


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சிலர் வாகனம் மூலம் தமிழக அரசால் தடை செய்யபட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விநியோகம் செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிபடை அகை்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முத்துலிங்கம் தெரு நாகாத்தம்மன் கோவில் அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகபடும் வகையில் வந்த இரண்டு மினி ஆட்டோக்களை மடக்கி பிடித்து விசாரனை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

சேலத்தில் குட்கா விற்ற இந்து முன்னணி தலைவர் கைது

Tap to resize

Latest Videos

விசாரணையில் சந்தேகமடைந்த காவல் துறையினர் மினி வேனை சோதனை செய்தனர். அப்போது பூண்டு மூட்டைகளுக்கு அடியில்  பதுக்கி வைத்து எடுத்துவரபட்ட ஒரு டன் எடைகொண்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து வாகனத்தில் பயணம் செய்த குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த மணவாசகம், ஆந்திர மாவட்டம் சித்தூர் பகுதியை சேர்ந்த பிரவின், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த மாரிமுத்து, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த், திருவள்ளூர் பகுதியை சேர்ந்த ஜெயா என்பதும் தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சட்டவிரோதமாக குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விநியோகம் செய்ததை ஒப்புகொண்டனர்.

கொடநாடு கொலை வழக்கு ...! குற்றவாளி யார்..? சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

அவர்களிடமிருந்து இரண்டு மினி வேன்கள், குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள், மூன்று செல்போன்கள், 30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மூதாட்டி உட்பட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!